பிரபல மூத்த வழக்கறிஞரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ராம்ஜெத் மலானி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ராகுல்காந்தி எனது கிளார்க் பணியில் சேரக்கூட தகுதியில்லாதவர். அவரை எனது கிளார்க் பணிக்கு கூட நியமிக்க மாட்டேன் என்று கூறியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
ஒரு நேர்மையான அமைச்சரின் வருமானத்தை விட எனது கிளார்க்கின் சம்பளம் அதிகம். அந்த கிளார்க் பணிக்கு கூட ராகுல்காந்தியை நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் உள்ள கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையில் மோடியின் அணுகுமுறையில் தனக்கு திருப்தியில்லை என்றும், இதுகுறித்து தான் மோடிக்கு எழுதிய கடித்தத்திற்கு எவ்வித பதிலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.