அத்திப்பழத்தின் அதிசய பலன்கள்

Kashmiri-figs1-

பறவைகள் அத்திப்பழம், ஆலம்பழம் ஆகிய இரு வகையான பழங்களை மிகவும் விரும்பி உண்கின்றன. இப்பழங்களில் உள்ள அரிய மருத்துவ குணங்களை பறவைகள் அறிந்திருக்கலாம். பறவைகள் அறிந்திருக்கும்போது, நாம் அறியாமல் இருக்கலாமா?

அத்திமரமும் ஆலமரமும், பெரும்பாலும் பறவைகளின் எச்சத்தில் இருந்து முளைத்து வளர்கின்றன. அத்திப்பழத்தை சித்தம் வளர்க்கும் பழம் என்பார்கள். சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவ மருந்துகளில் அத்திப்பழத்தின் பங்கு முக்கியமானதாகும். அத்திப்பழத்தையும் தேனையும் கலந்து சாப்பிட்டால், அபூர்வமான தித்திக்கும் சுவை கிடைக்கும். இந்த சுவையில் fig and honey என்ற பெயரில் ஐஸ்கிரீம் கூட உள்ளது.

உணவை விரைவில் ஜீரணித்து சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை நீக்குகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. வாய்நாற்றத்தை நீங்குவதுடன், தலைமுடியும் நீளமாக வளர உதவுகிறது.

தினசரி, 2 பழங்களை சாப்பிட்டால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்க, 5 பழங்களை இரவில் சாப்பிடலாம். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களை வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைத்து, பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை மட்டும் சாப்பிட்டால் இப்பிரச்னை தீரும்.

அத்திப்பழத்தால் உடல் கவர்ச்சி அதிகரிக்கும். இப்பழத்தை உடல் பலவீனம் மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது பயன்படுத்துகின்றனர். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை, தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

குறிப்பாக சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள், நீர்க்கட்டிகள், புண், சொறி, சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தரும். சிறுநீர்ப்பை புண், சிறுநீர் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும், அத்திப் பழம் உதவுகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால், மூலநோய் குணமாகும். கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகளும் வீக்கமும் நீங்கும். கண் பார்வையைக் கூட்டும். வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப்பழத்தில்அதிகம் உள்ளன. மற்ற பழங்ளை விட, அத்திப்பழத்தில், 4 மடங்கு தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் உள்ளன. இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இதை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சோகை நோய் வராது.

Leave a Reply