வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறையா? பொதுமக்கள் அதிர்ச்சி

bankவங்கிகளுக்கு தொடர்ந்து ஏழுநாட்கள் விடுமுறை வருவதாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மார்ச் 28ஆம் தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை என்றும், மறுநாள் ஞாயிறு என்பதால் விடுமுறை நாள் என்பது மட்டுமின்றி மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதி வங்கிகள் ஆண்டு இறுதிக்கணக்கு நாள் என்பதாலும்,  ஏப்ரல் 1ஆம் தேதி நிதியாண்டின் முதல் நாள் என்பதாலும், ஏப்ரல் 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி என்பதாலும், 3ஆம் தேதி புனித வெள்ளி என்பதாலும் வங்கிகள் தொடர்ந்து ஏழு நாட்கள் விடுமுறை என்று செய்திகள் பரவி வருகிறது. மேலும் 4ஆம் தேதி சனிக்கிழமை அரைநாள் மட்டுமே செயல்படும் என்பதால் அடுத்து 6ஆம் தேதியே வங்கிகள் முழுவேலைநாளாக இருக்கும் என்று செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் இந்த செய்தியை வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். மார்ச் மாதம் 28,29,30 ஆகிய தேதிகளில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் ஏப்ரல் 1 முதல் 3வரை மட்டுமே வங்கிகள் விடுமுறை தினங்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply