மியான்மர் நாட்டில் உள்ள பார் உரிமையாளர் புத்தரின் படத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 30 மாதங்கள் சிறைதண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மியான்மர் நாட்டி, பார் ஒன்றை நடத்தி வரும் பிலிப் பிளாக்வுட் என்பவர் தனது பாரில் புத்தர் காதில் ஹெட்போனுடன் பாட்டு கேட்பது போன்ற புகைப்படம் ஒன்றை வைத்திருந்தார். இந்த புகைப்படம் பாருக்கு வரும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் புத்தரை பார் உரிமையாளர் அவமதித்துவிட்டதாக ஒருவர் மியான்மர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. புத்தரின் படத்தை அவமதித்ததாக பார் உரிமையாளர் பிலிப் பிளாக்வுட் மற்றும் பாரின் மானேஜர்கள் துன் துரேன், ஹுட் கோ கோ லிவூன் ஆகியோர்களுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.