சூப்பர் ஸ்டார் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் ஓரளவிற்கு சுமாரான வசூலை தந்தபோதிலும் அந்த படத்தில் உருவான பிரச்சனைகள் மூலம் ரஜினியின் இமேஜை எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு டேமேஜ் செய்தனர் விநியோகிஸ்தர்கள். சிங்காரவேலன் தலைமையில் அரசியல் பின்னணியுடன் நடத்தப்பட்ட இந்த விவகாரம் மற்ற நடிகர்களையும் சுதாரிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில் முக்கிய விநியோகிஸ்தர்களிடம் விஜய் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், புலி’ படம் நஷ்டம் அடைந்தால் எந்த காரணத்தை முன்னிட்டும் நஷ்ட ஈடு கேட்கக்கூடாது என்றும், அதற்கு ஒப்புக்கொள்பவர்களுக்கு மட்டுமே புலி படத்தின் விநியோக உரிமை வழங்கப்படும் என்றும் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
விஜய்யை தொடர்ந்து வேறு சில முன்னணி நடிகர்களும் இதுபோன்ற கண்டிஷன்களை போட்டு வருவதாகவும், ரஜினியே கூட அடுத்த படத்தில் இதுபோன்ற கண்டிஷன்களை போட்டுத்தான் வியாபாரத்தை ஆரம்பிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.