பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு வெளிநாட்டு செல்லும் பாஸ்போர்ட் விசா போன்ற டாக்குமெண்டுகள் இல்லாததால், முதுகில் மறைத்து வைத்து எடுத்து சென்றதாகவும், ஆனால் அவர் விமான நிலைய அதிகாரிகளால் பிடிபட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 25 வயது நர்ஸ் ஒருவர் தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் வெளிநாடு செல்ல முடிவு செய்தார். ஆனால் குழந்தைக்கு தேவையான டாக்குமெண்டுக்கள் எதுவும் தயாராகாத்தால் குழந்தையை மறைத்து வைத்து விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி குழந்தையை தூங்கவைத்து முதுகில் பெல்ட் கொண்டு கட்டி விமானத்தில் அவர் ஏற முயன்றதாகவும், அவர் வித்தியாசமாக நடந்து சென்றதை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது அவரது முதுகுடன் இணைந்து குழந்தை கட்டப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் அந்த குழந்தை அவருடையதுதான் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.