மேஷம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள்
கடகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள்
சிம்மம்
பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களின் கோரிக்கையை ஏற்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள்
துலாம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள்
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
ராசி குணங்கள்
தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நீண்ட நாள் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். புதியவரின் நட்பால் உற்சாமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள்
கும்பம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சோர்வு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா