உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. இன்று காலை 9மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி சற்று முன்வரை 10 ஓவர்களுக்கு 52 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் ஆடி வருகிறது. ரோஹித் சர்மா 24 ரன்களும் தவான் 23 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.