ஓடும் ரயிலில் அமைச்சரிடம் கொள்ளை. வேடிக்கை பார்த்த பாதுகாவலர்கள். அதிர்ச்சி தகவல்

train robberyமத்தியபிரதேச அமைச்சர் ஒருவரிடம் ஓடும் ரயிலில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொள்ளையடித்த போது, பாதுகாப்புக்கு அவருடன் இருந்த ரயில்வே போலீஸாகள் தங்கள் கையில் இருந்த துப்பாக்கியில் தோட்டா இல்லாததால் கொள்ளையை வேடிக்கை பார்த்ததாக வந்துள்ள செய்தி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை மத்தியபிரதேச மாநில நிதியமைச்சர் ஜெயந்த் மாலையா தனது  மனைவியுடன் ஜபல்பூர் – நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற ரயில் மதுரா அருகே சென்றபோது அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று, அமைச்சர் அமர்ந்திருந்த ரயில் பெட்டியின் கதவை திறந்து உள்ளே வந்தனர்.

அமைச்சர் மற்றும் அவரது மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்த விலைமதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தனர். இந்த கொள்ளையை தடுக்க வேண்டிய அமைச்சரின் பாதுகாவலர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டா இல்லாததால் வேடிக்கை பார்த்ததாக கூறப்பட்டது. இந்த திடுக்கிடும் தகவலை அமைச்சரின் மனைவி சுதா மாலையா  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ரயிலில் இருந்த ரயில்வே போலீஸார் யாரும் கொள்ளையை தடுக்கவோ, கொள்ளையர்களை பிடிக்கவோ முயற்சிக்காமல் அங்கிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓட்டம் பிடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் ரயில் டெல்லி வந்ததும், நேராக நாடாளுமன்றத்திற்கு சென்ற அமைச்சர் மாலையா, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் செய்தார். மேலும் நாடாளுமன்ற கூட்டம் அப்போது நடந்துகொண்டிருந்ததால் மக்களவையில் இதுகுறித்து உறுப்பினர் ஒருவர் பிரச்னை எழுப்பினார்.

இதனையடுத்து கொள்ளை நடந்த ரயிலில் பணியில் இருந்த ரயில்வே போலீஸார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், உத்தரபிரதேச காவல்துறையிடமும் அறிக்கை கேட்டுள்ளது.

Leave a Reply