சீனாவில் உள்ள ஒரு லாரி டிரைவரின் அஜாக்கிரதையால் ஏழு டன் மீன்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவில் உள்ள குஸ்ஸியோ என்ற இடத்தில் ஏழு டன்களுடன் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த மீன்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உயிருடன் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் லாரி டிரைவர் லாரியின் பின்கதவை சரியாக மூடாததால், திடீரென லாரி வேகமாக சென்று கொண்டிருந்தபோது சாலையில் மீன்கள் அனைத்தும் சிதறியது.
பிசியான தேசிய நெடுஞ்சாலையில் ஏழு டன்கள் மீன்களும் சிதறியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மீன்களும் அனைத்தும் துடிதுடித்தன. தகவல் அறிந்து போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் மீன்களை மீட்டு மீண்டும் லாரியில் சேர்க்க முயற்சி செய்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மீன்களை அள்ளிக்கொண்டு சென்றனர். சாலையில் மீன்கள் சிதறியதால் தண்ணீர் இன்றி பல மீன்கள் இறந்ததாகவும், ஒருசில டன் மீன்கள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து சீன காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை செய்து கொண்டுள்ளனர். லாரி டிரைவரின் அஜாக்கிரதையால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.