ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் குறைக்கப்படுகிறதா? மத்திய நிதியமைச்சர் விளக்கம்

arun jaitleyஅரசு பத்திர வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்கள் செபிக்கு மாற்றப்பட்டாலும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில், அரசு பத்திர வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்கள் ரிசர்வ் வங்கியிடமிருந்து செபிக்கு மாற்றப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், இதனால் ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் குறைக்கப்படுகிறதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசு பத்திர வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரம் மாற்றப்படுவது பற்றி மீண்டும் ஒருமுறை கலந்தாலோசிக்கபடும். ரிசர்வ் வங்கியிடம் கலந்தாலோசித்த பிறகே மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கும். மேலும் வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது 2015 நிதி மசோதா மீதான விவாதம் நடைபெறும்.

ரிசர்வ் வங்கி கவர்னரும் நிதி அமைச்சகத்துடன் தொடர்பில்தான் இருக்கிறார். ரிசர்வ் வங்கி திறமையின் மீது மத்திய அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று உறுதியாக கூறினார்.

Leave a Reply