உலகக்கோப்பை கிரிக்கெட். நாளை முதல் அரையிறுதி. கோப்பையை வெல்வது யார்?

cricketஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்டை நெருங்கியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்னும் மூன்றே போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சாம்பியன் பட்டம் வாங்க இருக்கும் அணி என்பதை அறிய அதிக ஆவலுடன் உள்ளனர்.

உலகக்கோப்பைக்கு முந்தைய தொடர்களில் சொதப்பலாக விளையாடியபோதும், உலக்கோப்பை தொடரில் சுதாரித்து விளையாடி வரும் இந்திய அணி, இந்த தொடரில் இன்னும் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல நியூசிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்த அணி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதவுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான காலிறுதி போட்டியில் அபாரமாக இரட்டை சதமடித்த குப்தில் நல்ல பார்பில் இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான அரையிறுதி போட்டியும் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நல்ல பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, தவான், சுரேஷ் ரெய்னா, கோஹ்லி, தோனி ஆகியோர்கள் அரையிறுதியிலும் ஜொலித்தால் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply