மொராக்கோ நாட்டின் மிக வலிமையான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் பத்து வயது சிறுமி ஒருவர். ஆம் அந்நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமியான இக்ராம் சல்ஹி என்றா சிறுமி தன்னுடைய தலைமுடியால் ஒன்றரை டன் எடையுள்ள மெர்சிடஸ் காரை 32 அடிகள் வரை இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
மொரக்கோ நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தலைமுடியில் நீண்ட கயிறு ஒன்றை கட்டி அதன் மற்றொரு முனையில் மெர்சிடஸ் கார் ஒன்றில் கட்டப்பட்டது. சுற்றிலும் தனது தோழிகள் மற்றும் உறவினர்கள் கொடுத்த உற்சாகத்தில் தலைமுடியால் ஒன்றரை டன் எடையுள்ள காரை 32 அடிகள் வரை இடைவிடாமல் நிறுத்தி சாதனை புரிந்தார். அவருக்கு மொரக்கோ நாட்டின் வலிமையான பெண் என்ற பட்டத்துடன் ரொக்கப்பரிசும், சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த சாதனையை புரிய இக்ராம் சல்ஹி பல மாதங்கள் பயிற்சி எடுத்ததாகவும், அவருடைய விடாமுயற்சியால் இந்த சாதனை செய்யப்பட்டதாக அவருடைய பயிற்சியாளர் ஜொனோத்தான் ரோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.