அமெரிக்காவை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது பின்னழகை பெரிதாக்க போட்ட ஊசியின் காரணமாக பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியை சேர்ந்த விகாஷே ரெய்ட் என்ற 34 வயது பெண்மணி தனது உடலழகை கவர்ச்சியாக்க வேண்டும் என விரும்பி பியூட்டி பார்லர் ஒன்றை அணுகியதாகவும், அந்த பியூட்டி பார்லரை நடத்திய டெனிஸ் ராஸ் என்பவர் பின்னழகை பெரிதாக்க நான்கு ஊசிகள் போடவேண்டும் என்று அறிவுரை கூறியதாகவும், தெரிகிறது.
வாரம் ஒன்றுக்கு ஒரு ஊசி என்று போட்டு வந்த விகாஷே, நான்காவது ஊசி போட்ட தினத்தில் அவருக்கு செலுத்தப்பட்ட மருந்து ஏற்படுத்திய அலர்ஜியால் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இதுகுறித்து டல்லாஸ் போலீஸ் விசாரணை செய்து பியூட்டி பார்லர் உரிமையாளரை கைது செய்தனர். அமெரிக்காவில் இதுபோன்று பல பெண்கள் பின்னழகை பெரிதாக்க தவறாக முறையை கடைபிடித்து வருவதாகவும், இதுகுறித்த சரியான வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகினறனர்.