பணயக்கைதிகளின் தலையை கத்தியால் அறுத்து கொலை செய்வது, உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்வது, கல்லால் அடித்து கொலை செய்வது போன்ற கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த ஐ.எஸ்.ஐ.ஐ தீவிரவாத இயக்கத்தினர் சமீபத்தில் திருடன் ஒருவனின் கையை தனியாக வெட்டி எடுக்கும் தண்டனை ஒன்றை அளித்துள்ளனர். இந்த தண்டனையின் வீடியோ தீவிரவாதிகளின் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் உள்ள டைகர்ஸ் ரிவர்ஸ் என்ற பகுதியை சேர்ந்த ஒரு திருடனுக்கு சமீபத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கையை வெட்டும் தண்டனையை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் வழங்கியுள்ளனர். சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனின் கையை கில்ட்டிங் மிஷின் கொண்டு கையின் மணிக்கட்டு வரி துண்டாக வெட்டி எடுத்தனர்.
கையை வெட்டி எடுத்தவுடன் உடனடியாக தயாராக இருந்த டாக்டர் ஒருவர் கைக்கு மருந்து வைத்து கட்டு போட்டார். இவை அனைத்துமே பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1FSEimJ” standard=”http://www.youtube.com/v/e60uZQrLRFQ?fs=1″ vars=”ytid=e60uZQrLRFQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep5900″ /]