கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவை தோற்கடித்து புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்ரிபாலா சிறிசேனா, நான்கு நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். ஜனாதிபதி பதவியேற்றவுடன் முதல்முறையாக சீனா செல்லும் அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி சிறிசேனாவுடன் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ரோசி சேனாநயக்க மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்பட 20 பேர்கள் அவருடன் செல்கின்றனர்.
இலங்கை அதிபரின் சீன பயணம், மற்றும் இலங்கை-சீன தலைவர்கள் கையெழுத்திடும் ஒப்பந்தங்கள் குறித்து இந்தியா உற்று நோக்குவதாகவும் மத்திய அரசு அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.