தேவையான பொருட்கள் :
மீன்
நல்லெண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய்
வெந்தயம்
சாம்பார் வெங்காயம் – 150 கி
பூண்டு
தக்காளி – 150 கி
புளி – எலுமிச்சை பழ அளவு
மஞ்சள தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
உப்பு
கொத்தமல்லி
தேங்காய் பால் – அரை கப்
மிளகு தூள்
இஞ்சி பூண்டு விழுது
செய்முறை :
• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
• அடுத்து பூண்டை போட்டு வதக்கவும்.
• பூண்டு முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும்.
• தக்காளி பழத்தை போட்டு வதக்கவும்.
• நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
• மசாலா திக்கானதும் புளி கரைசலை சேர்க்கவும்.
• தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
• மீனை உப்பு, மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு போட்டு பிசைந்து வைக்கவும்.
• குழம்பு ஒரு கொதி வந்து திக்கானவுடன் மீனைப் போடவும். மிளகு தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலையை போடவும்.
• மீன் வெந்தவுடன் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.