திருமணத்தை எளிதாக்கும் மேட்ரிமோனியல் இணையதளங்களின் சேவைகள்.

KSM billboardகடந்த சில வருடங்களுக்கு முன்னர் நமது குடும்பத்தில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் பார்க்க வேண்டும் என்றால் புரோக்கரை அணுகி அவருக்கு தேவையான கமிஷன் கொடுத்து பல மாதங்கள் காத்திருந்த பின்னர் ஏதாவது ஒரு வரனை முடிவு செய்வோம். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப ரீதியான காலகட்டத்திற்கு ஏற்ப ஏராளமான மேட்ரிமோனியல் இணையதளங்கள் இந்த சேவையை எளிதாக்கியுள்ளது. நம் வீட்டின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து கொண்டே நமது மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை நாம் இணையதளங்களின் உதவியால் முடிவு செய்துவிடலாம்.

சென்னையில் மட்டும் ஏராளமான இணையதளங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. அனைத்து இணையதளங்களும் பதிவுகளை இலவசமாக செய்ய அனுமதித்து விட்டு அதன்பின்னர் சேவைக்கட்டணமாக குறிப்பிட்ட தொகையை வசூல் செய்கின்றன. இருப்பினும் புரோக்கர்களுக்கு கொடுக்கும் பணத்தை விட குறைவாகவும், ஒரே நேரத்தில் ஏராளமான மணமகள் மற்றும் மணமகன்களின் விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பதாலும் பொதுமக்கள் தற்போது மேட்ரிமோனியல் இணையதள சேவையை அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்த சேவையில் முழு அளவில் ஈடுபாட்டுடன் ‘கல்யாண சேவா’ என்ற இணையதளமும் செய்து வருகிறது. நன்கு அனுபவம் பெற்ற குழுவினர்களால் செயல்பட்டு வரும் இந்த இணையதளம் சென்னையில் உள்ள முன்னணி மேட்ரிமோனியல் இணையதளங்களில் ஒன்று என இந்த இணையதள சேவையை பயன்படுத்தியவர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply