நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த சம்மன் உத்தரவை எதிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து மன்மோகன் சிங் மற்றும் பிர்லா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
2005-ம் ஆண்டு பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷா மாநில தலாபிரா சுரங்கங்களை ஒதுக்கிய விவகாரத்தில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் மன்மோகன் சிங் உட்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து ஏப்ரல் 8-ம் தேதி இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மன்மோகன் சிங்குக்கு எதிராக விசாரணை தேவையில்லை என்று சிபிஐ தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தும் சிறப்பு நீதிமன்றம் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது