தமிழக முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்த 2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட் குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு பார்ப்போம்
திமுக தலைவர் கருணாநிதி: இந்த நிதி நிலை அறிக்கை “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன். அதில் இரண்டு குளம் பாழ் – ஒன்றில் தண்ணீரே இல்லை” என்ற வாய்ஜாலத்திலே உள்ள ஏமாற்று வித்தையைப் போலத் தான் உள்ளது”
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வரிக்கு வரி பெருமிதம் கொண்டு 2015 – 2016 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுமையும் இல்லை, புதிய திட்டங்களும் இல்லை, மக்களுக்கான சலுகைகளும் இல்லை
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பயன்தரும் எந்தவொரு புதிய அறிவிப்பும் இல்லை. பழைய திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அளவுக்கே இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அம்மா’ இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததாலோ என்னவோ, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: 2015- 16ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை ‘அம்மாவில் ஆரம்பித்து, அம்மாவிலேயே முடிந்திருக்கிறது’. இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை பூஜ்ஜியம் தான்