கால், கை, நகங்கள், விரல் நுனியில் உள்ள மென்மையான தசைகளை பாதுகாக்கின்றது. நகங்களில் அடிபட்டால், கிருமி தாக்குதல், சோரியாஸிஸ் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். நகங்கள் கெராடின் என்ற புரதப் பொருளால் ஆனது.
நகத்தின் பலம், தடிமம், வளர்ச்சி போன்றவை அவர்கள் பெற்றோரின் அமைப்பின் படியே அமைகின்றது. நக பாதிப்பு அனைத்து வயதினரையும் தாக்கும். அடிபடுதல், கிருமி தாக்குதல், முறையற்ற செரும்பு, ஷூ, சமம் பாதிப்பு, குறைந்த இரத்த ஓட்டம், நரம்பு பாதிப்பு இவைகளால் நகங்கள் பாதிக்கப்படும். இதற்கான சிறப்பு மருத்துவர் உள்ளார். கால் விரல்களில் வரும் மூட்டு வலி பாதிப்பும், நடையில் ஏற்படும் மாற்றமும் கூட நகங்களை பாதிக்கும்.
உங்கள் நகம் உங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லும் செய்திகள் :
* மிகச் சிறிய சொரசொரப்பான பள்ளங்கள் போல் நகங்கள் தோற்றம் அளித்தால் சோரியாஸிஸ் எனப்படும் சரும பாதிப்பு இருக்கின்றது. மற்றும் சில வகை சருமபாதிப்புகளாலும் இவ்வாறு ஏற்படும்.
* நகத்தின் நுனி சற்று அகன்று முன்புறமாய் வளைந்தாற் போல் இருந்தால் ‘க்ளப்பிஸ்’ எனப்படும். இது பலவகையான நுரையீரல் பாதிப்பினை தெரிவிக்கும். மேலும் குடல் வீக்கம், கல்லீரல் நோய், இருதய நோய், எய்ட்ஸ் ஆகியவையும், இதுபோன்ற நக தோற்றத்தை ஏற்படுத்தும்.
* ஸ்பூன் போன்று நன்கு குழிந்த நகங்கள் இரும்பு சத்து குறைவால் ஏற்படும். ரத்த சோகையினாலும் இது ஏற்படலாம். இருதய நோய் தைராய்டு குறைபாடு இவற்றினாலும் இப்படி ஏற்படும்.
* விரல் முழுவதும் வெள்ளையாகவும் விரல் நுனியில் ரோஸ் நிறத்திலும் காணப்படும் நகங்களை டெர்ரிஸ் நகங்கள் என்று சொல்வர். இது வயது கூடுவதன் காரணமாக ஏற்படும் மாற்றம் என்றாலும் கல்லீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு சிறுநீரக பாதிப்பு போன்றவற்றாலும் நகம் இது போன்று காணப்படும். இதற்கு கல்லீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு சிறு நீரக பாதிப்பு. சர்க்கரை நோய் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
ப்யூஸ்வரிகள்: நகத்தில் குறுக்காக காணப்படும் வரிகளை இவ்வாறு கூறுவர். நகத்தின் அடியில் காயப்படுவதால் இது ஏற்படும். இவ்வரிகள் கட்டுப்படாத சர்க்கரை நோய், இரத்த நாள பாதிப்பு அதிக ஜுரம், வைரஸ், நிமோனியா, தாது உப்பு குறைபாடு இவைகளாலும் ஏற்படும்.
ஆனிகோலைஸிஸ்: இந்த பாதிப்பால் நகங்கள் வலுவிழந்து ஆடி அப்படியே விழுந்து விடும். இது வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ, பச்சை கலந்தோ இருக்கலாம். தைராய்டு குறைபாடு, சோரியாஸிஸ் போன்றவைகளினாலும் இப்படி வரலாம்.
* மஞ்சள் நகம் என்பது நகங்கள் தடித்து நிறம் மாறி இருக்கும். நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கும் இவ்வாறு இருக்கும்.
* நகம் உடைவதற்கு காரணம் வைட்டமின் ஏ, சி, அயோடின் குறைபாடாக இருக்கலாம்.
* அடர்ந்த நிறம் கொண்ட நகப் பூச்சாலும், கிருமியினாலும் மஞ்சள் நகம் வரலாம்.
* நகத்தில் வெள்ளை புள்ளிகள் பெரும் பாதிப்பு அல்ல.
* நகத்தில் கறுப்பு கோடுகள் அதிகரிப்பது போல் இருந்தால் உடனடி மருத்துவரை அணுகவும்.
* நகத்தில் அதிக கறுப்பு புகை பிடிப்பதாலும் ஏற்படலாம். நகம் ஒரு மாதத்தில் 3.5 மி.மீ. வளரும். நகமும் தலைமுடியும் கெராடின் என்ற புரதத்தால் ஆனது. ஆண்கள் நகம் பெண்கள் நகத்தை விட வேகமாக வளரும். கோடையில் நகம் வேகமாக வளரும். நகம் ஆரோக்கியமாக இருக்க ஆக்ஸிஜன், சத்து ஆகியவை அவசியம்.
நக பாதுகாப்பு :
* நகங்கள் சுத்தமாக ஈரமின்றி இருக்க வேண்டும்.
* நகங்களை நேராக வெட்டுங்கள்.
* நகங்களை கடிக்கக் கூடாது.
* நகங்களை டின்களை திறக்க, பிய்க்க கத்தி போல் உபயோகிக்கக் கூடாது.
* கால் நகங்களை சின்னதாக வெட்டி விட வேண்டும்.
* உள் வளர்ந்த நகத்தினை சரி செய்ய மருத்துவரின் உதவி கொண்டே சிகிச்சை பெற வேண்டும்.
* நகப் பூச்சுகளை அளவாகப் பயன்படுத்துங்கள்.
* ரசாயனம் மற்றும் கடுமையான வேலைகளுக்கு கையுறை, காலுறை பயன்படுத்துங்கள்.
* நகம் கடிக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள்.
* காரமான சோப்புகளை பயன்படுத்தாதீர்கள்.
* புகை பிடிக்காதீர்கள்.
* மாஸ்ட்சரைஸர் பயன்படுத்துங்கள்.
* அளவான, முறையான காலணி அணியுங்கள்.
* ஷூ அணிந்தால் நல்ல காற்றோட்டம் இருக்கட்டும்.
* பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை எடுங்கள்.
உங்கள் நாக்கு என்ன சொல்கிறது?
மருத்துவரிடம் நீங்கள் சென்றவுடன் அவர் உங்களை பரிசோதிக்கும் பொழுது ‘நாக்கை நீட்டுங்க’ என்று சொல்லி நாக்கை பரிசோதிப்பார். உடல் சரியில்லாமல் இருப்பது. வலி, அரிப்பு, சரும பாதிப்பு, உடல் நாற்றம் என பல வழிகளில் வெளிப்படும். இதே போன்று நாக்கும் உடல் பாதிப்புகளை வெளிப்படுத்தும்.
* வழுவழுப்பான வெளிறிய சற்று தடித்த நாக்கு பி12, இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது.
* கறுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் நாக்கு வாய் சுகாதார மின்மை காரணமாகவும் அதனால் ஏற்படும் கிருமி தாக்குதலின் காரணமாகவும் ஏற்படுகின்றது. இவர்கள் சர்க்கரை நோய் இருக்கின்றதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.
* வெள்ளை நாக்கு கிருமி பாதிப்பினால் ஏற்படும்.
* மிகப் பெரிய வீங்கிய நாக்கு இருந்தால் உடனடி மருத்துவ பரிசோதனை அவசியம்.
* வாயில் அடிக்கடி புண் ஏற்பட்டால் மசாலா, கார உணவுகள், சிகரெட், வெற்றிலை போன்றவற்றினை அடியோடு தவிர்க்கவே. உங்கள் உடல் வேறு என்ன சொல்கிறது. நன்கு தூங்கி எழுந்தும் கண்ணின் கீழ் கறுப்பு வளையம் இருக்கிறதா?
கீழ் கண்டவைகளை கவனியுங்கள்.
* உங்களுக்கு ஏதாவது அலர்ஜி இருக்கின்றதா?
* கண்களை அதிகம் கசக்குகின்றீர்களா?
* முறையற்ற நிலையில் தூங்குவது.
* உங்களது சிறுநீர் திடீரென அதிக மஞ்சளாக இருக்கின்றதா?
* நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கின்றீர்களா?
* உடலில் நீர் சத்து குறைந்துள்ளதா?
* நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து காரணமா?
* என்றுமில்லாமல் திடீரென ‘பொடுகு’ தாக்குதல் ஏற்பட்டுள்ளதா?
* உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா?
* தூங்கும் முறை, நேரத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதா?
* தரமில்லாத முடி சாயம் உபயோகிக்கின்றீர்களா? இரவில் தூக்கம் வரவில்லை என்று தவிப்பவரா நீங்கள்? ஏதோ ஒரு மன உளைச்சல் உங்களை அறியாமலேயே வாட்டும் பொழுது கார்டிசால் ஹார்மோன் அளவு இரவில் அதிகரிப்பதால் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் உடலின் திறன் குறைந்து விடுகின்றது. இது உங்களை நோயாளி ஆக்கி விடுகின்றது. இயற்கை தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் திறனை உடலுக்குத் தந்து உள்ளது. ஆனால் உடல் முழுவதும் மன உளைச்சல், டென்ஷனை ஏற்றி கார்டிசால், எலிஹெப்ரின் போன்ற ஹார்மோன்களால் நிரம்பி வழியும் காரணத்தால் உடலால் தன்னை சரி செய்து கொள்ள முடிவதில்லை ஆக கார்டிசால் போன்ற ஹார்மோன்களின் அளவை குறைப்பதற்கு
* தியானம் கண்டிப்பாய் பழகுங்கள்.
* மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருங்கள்.
* செல்லப் பிராணிகளோடு கொஞ்ச நேரம் இருங்கள்.
* ஒரு பொழுது போக்குக்காக பாட்டு, விளையாட்டு போன்ற எதையாவது பழகுங்கள்