உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 328 ரன்கள் அடித்துள்ளது.
இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 105 ரன்களும், பின்ஸ் 81 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியின் தரப்பில் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், ஷர்மா 2 விக்கெட்டுக்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்
வெற்றி பெற 329 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் அணி எது என்பதை தீர்மானிக்கும் விறுவிறுப்பான இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும்.