இந்திய அணி மீண்டும் மீண்டும் தோல்வி அடைய பிரார்த்தனை செய்வேன். பிரபல இயக்குனரின் சர்ச்சைக் கருத்து.

ram gopal varmaநேற்று நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்ததில் தனக்கு பெரும் மகிழ்ச்சி என இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கோர்ட் படியேறி வரும் அவர் நேற்று  “இந்தியா தோல்வியடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கிரிக்கெட்டை விட அதன் ரசிகர்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது.

எனக்கு என் தேசத்தை பிடிக்கும், அதனால் கிரிக்கெட்டைப் பிடிக்காது. ஏனென்றால் என் நாட்டு மக்கள் வேலை செய்வதை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கின்றனர். இந்த கிரிக்கெட் வியாதியிலிருந்து என் நாட்டு மக்களை கடவுள் குணமடையச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

இந்திய அணியை மீண்டும் மீண்டும் தோற்கடிக்குமாறும் மற்ற அணிகளை கேட்டுக் கொள்கிறேன். அப்போதாவது இந்திய அணி விளையாடுவதை நிறுத்தி, என் மக்கள் கிரிக்கெட் பார்ப்பதை மறப்பார்கள். சிகரெட் மற்றும் குடிப்பழக்கத்தை விட கிரிக்கெட் போதை மிகுந்த தேசிய வியாதி” என கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரது பக்கத்திற்கு படையெடுத்து அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒருசில அவரது கருத்துக்கு தங்களது ஆதரவையும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply