சுவாமியை தழுவிய சூரிய கதிர்கள்: முருகன் கோவிலில் அபூர்வம்!

lord_muruga_tiruttani_2

திருத்தணி: ஆண்டுக்கு ஒரு முறை, கோட்ட ஆறுமுக சுவாமியை சூரிய ஒளிக்கதிர்கள் தழுவும், அபூர்வ நிகழ்வு நேற்று காலை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.

மூன்று நாட்கள்: இக்கோவிலில், ஆண்டுதோறும், மூன்று நாட்கள் சூரிய பூஜை நடைபெறும். இந்தாண்டின் முதல் நாள் சூரிய பூஜை, நேற்று காலை நடந்தது. காலை 6:10 மணிக்கு சுவாமியின் திருப்பாதம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. அப்போது மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று காலை 6:12 மணிக்கு, இரண்டாம் நாள் சூரிய பூஜையில், சுவாமியின் திருமேனி (நாபிக்கமலம்) மீதும், நாளை காலை 6:15 மணிக்கு, மூன்றாம் நாள், சூரிய பூஜையில், சுவாமியின் சிரசு மீதும், சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.

சிறப்பு பூஜை: அப்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் செய்துள்ளனர்.

Leave a Reply