இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது. மதுரை கல்லூரி வழங்கியது.

Seenu-Ramasamyமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் ‘மக்கள் முதல்வர்’ என்று அழைத்து வரும் நிலையில் ஒரு இயக்குனருக்கு மக்கள் இயக்குனர் என்ற பட்டத்தை மதுரை கல்லூரி நிர்வாகம் அளித்து கெளரவித்துள்ளது.

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இந்த படத்திற்கு பாடல் எழுதிய வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றனர். இந்நிலையில் நேற்று சீனு ராமசாமிக்கு மதுரையில் ‘மக்கள் இயக்குனர்’ என்ற பட்டம் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் கடந்த 125 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுரைக்கல்லூரி, நேற்று மாலை நடத்திய ஒரு விழாவில் இந்த விருதை இயக்குனர் சீனு ராமசாமிக்கு வழங்கியது. சீனு ராமசாமிக்கு இந்த விருதை மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.முரளி மற்றும் பேராசிரியர் ந.ரத்தினக்குமார் ஆகியோர்கள் வழங்கினர்.

விருதை பெற்றவுடன் இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய இயக்குனர் சீனு ராமசாமி, ‘ “வாழும் காலத்தில் இதுபோன்ற பட்டப்பெயர்கள் மற்றும் அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விததில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே என்றும் நிரந்தரமானவை. இருப்பினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக்குழுமம் வழங்கும் இவ்விருதினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது” என்று கூறினார்.

Leave a Reply