5 பேர் பலியாக காரணமான திருவாரூர் பல்கலை கட்டிடம். எஞ்ஜினியர்கள் கைது.

thiruvarur accidentதிருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகம் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியானது குறித்து அந்த கட்டடத்தை கட்டி வரும் என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பல்கலைக்கழகம் அருகே குடியிருப்பு வளாகம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

பல்கலை முகப்பு பகுதியில் 15 அடி உயரத்தில் பக்கவாட்டு சுவர் எழுப்பப்பட்டு அதில் 50 அடி உயரத்தில் சிமெண்ட் தூண்  அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூணுக்குக் கீழ் பகுதியில் முதல் மாடிக்கு கான்கிரீட் தளம் போட இரும்பு கம்பிகள் உதவியுடன் சென்ட்ரிங் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

இந்தப்  பணியில் உத்தரப்பிரதேசம், ஒடிசா, போன்ற வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கட்டிடத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தூண் திடீரென எதிர்பாராமல் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஒடிசாவை சேர்ந்த சமீர் குமார் செட்டி, கிட்டு, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராம் சுபாத் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம்டைந்த அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை அமைச்சர்கள், விஜயபாஸ்கர், காமராஜ், மோகன் ஆகியோர் பார்வையிட்டனர். சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த நிறுவன பொது மேலாளர் ஆனந்தன்,  என்ஜினீயர்கள்  பிரபு,  சதிஷ்குமார், மேஸ்திரி அய்யனார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு அவர்கள் நன்னிலம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply