சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தில் அறிமுகமான நடிகை மேனகா. இவர் அதன்பின்னர் கீழ்வானம் சிவக்கும் உள்பட பல திரைப்படங்களில் நடித்ததோடு சில ஆண்டுகள் மலையாள தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். தற்போது நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினிமுருகன்’ படத்தில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், அந்த படம் ரிலீஸாகும் முன்னரே பாபிசிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’, படத்தில் நடிக்க கமிட் ஆனார். தற்போது ஜீவா நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘ஜீவா நடித்த யான் படத்தோல்வியை அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் ‘கவலை வேண்டாம். இந்த படத்தை யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கவுள்ளார். இரண்டு கதாநாயகிகள் கொண்ட படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நாயகியாக நடிக்கின்றார். இன்னொரு நாயகியின் தேர்வு நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.