நாடு முழுவதும் பசுவதையை தடுக்க முயற்சி. உள்துறை அமைச்சர் தகவல்

India Hindu Festivalபாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து இந்த தடையை நாடு முழுவதும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ம்த்திய பிரதேத்தில் நேற்று ஆன்மீகவாதிகளுடன் நடத்திய ஒரு உரையாடலை அடுத்து நிருபர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்ராஜ்நாத் சிங், பசுக்களை கொல்வதை நாடு முழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து, அவர் கூறியதாவது: “இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைத்து, வலிமையையும் பயன்படுத்தி நாங்கள் இதை தடை செய்வோம். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்வோம்” என்று கூறியதோடு  பசு வதை தடை செய்யப்படும் என்ற பா.ஜ.க. வின் தேர்தல் அறிக்கையையில் கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளவில் மாட்டிறைச்சியை பயன்படுத்துவதில் 5-வது இடத்திலும், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 2-வது இடத்திலும் இந்தியா இருக்கும் நிலையிலும், ‘பசு வதை தடை’ தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள பலருக்கு வேலை பறி போகும் அபாயம் ஏற்படும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply