நைஜீரிய அதிபர் தேர்தல். எதிர்க்கட்சி வேட்பாளர் ஆட்சியை பிடித்தார்.

nigeriaசமீபத்தில் நடைபெற்ற நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தலில் முதல்முறையாக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன், தன்னை வீழ்த்திய எதிர்க்கட்சி வேட்பாளரான முகம்மது புகாரிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துவிட்டு தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சுமார் 27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் நைஜீரிய எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரியின் எதிர்க்கட்சி பல மாநிலங்களில் முன்னிலையில் இருப்பதாகவும், ஒருசில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும், தேர்தல் பார்வையாளர்கள், நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றதாக கூறியுள்ளனர்.

தேர்தல் அமைதியாகவும், நியாயமான வகையிலும், சுதந்திரமான முறையிலும் நடைபெறும் என வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதிகள் உண்மை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என குட்லக் ஜோனாதன் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார். புகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் ஜோனாதன் குறிப்பிட்டுள்ளார். புகாரியின் அனைத்து முற்போக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவரும் ஜோனாதனை பாராட்டியுள்ளார்.

தனது நடவடிக்கையின் மூலம் ஹீரோவாக என்றும் மனதில் இடம்பிடித்திருப்பார் ஜோனாதன். இனி பதட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார். போகோஹாரம் தீவிரவாதிகளின் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட போர்னோ மாகாணத்தில் மட்டும் புகாரிக்கு 94 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply