பாபர் மசூதியை இடிக்க ஆதரவளித்ததற்காகவே நரசிம்மராவுக்கு நினைவகம். உ.பி. அமைச்சர் குற்றச்சாட்டு

narsimhaநரசிம்மராவுக்கு நினைவகம் அமைக்க சமீபத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. பாபர் மசூதியை இடிக்க ஆர்.எஸ்.எஸ். உடன் புரிந்துணர்வில் ஈடுபட்டதற்கு பரிசு அளிக்கவே மத்திய அரசு நரசிம்மராவுக்கு நினைவகம் அமைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஆசம்கான் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் இன்று காலை செய்தியாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ”முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு நினைவகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. இது 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாமர் மசூதி இடிப்பு மற்றும் 8ஆம் தேதி சபுதாராவை கட்டுவது ஆகியவை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். உடன் நரசிம்மராவ் புரிந்துணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு பரிசு அளிக்கும் விதமே என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் இந்த நினைவகம் கட்டுவதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு குறித்த செய்தி வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி செய்யவே மத்திய அரசு விரும்புவதாகவும், இந்த விஷயம் உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கும் சென்று சேரும் என்றும் இதுபோன்ற நடவடிக்கை சமுதாயத்தில் பாதிப்பையே ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply