நூலக அறிவியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு கல்லூரியில் பணி

download (3)

ஜார்கண்ட மாநில தான்புரத்தில் செயல்பட்டு வரும் Indian School of Mines என்ற பொறியியல் கல்வி மையத்தில் (சுரங்கம் சார்ந்த) காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Librarian – 01
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நூலக அறிவியல், தகவல் அறிவியல், டாக்குமெண்ட்டேஷன் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் NET/SLET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

பணி: Semi Professional Assistant (Library) – 03
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நூலக அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு குழுவால் நடத்தப்படும் Professional Competency Test, Computer Proficiency Test மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ismdhanbad.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து டி.டி மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Registrar, Indian School of Mines, Dhanbad என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Registrar (Estt), Indian School of Mines, Dhanbad – 826004.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ismdhanbad.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply