பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியருக்கு பிலாவல் பூட்டோ என்ற மகனும், பக்தவார் பூட்டோ, ஆசிபா பூட்டோ என 2 மகள்களும் உள்ளனர். பிலாவல் பூட்டோ கடந்த ஆண்டு அரசியலில் குதித்து பாகிஸ்தான் அரசியலை கலக்கி வந்தார். இருப்பினும் கட்சி விவகாரங்களை கையாள்வதில் அவருக்கும், அவரது தந்தை சர்தாரிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பிலாவல் பூட்டோ, ராகுல்காந்தி பாணியில் இரண்டு ஆண்டுகல் ஓய்வு எடுக்க போவதாகவும், அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு உயர்கல்வி படிக்கப்போவதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே அவருக்கு மாற்றாக குடும்ப வாரிசு ஒருவர் கட்சியில் இணைக்க முடிவு செய்த ஆசிப் அலி சர்தாரி தனது மகள் பக்தவார் பூட்டோவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்துள்ளார் என பாகிஸ்தான் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன
இந்த நிலையில் பக்தவார் பூட்டோ, தனது தாய் வழி தாத்தா ஜூல்பிகர் அலி பூட்டோவின் நினைவு நாளில் நாளை மறுதினம் அரசியல் மேடையில் முதன்முதலாக பேச உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.