தேர்தலில் படுதோல்வி அடைந்து பதவியை இழந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பெரிய சதித்திட்டம் தீட்டி வருவதாக இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்லை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சந்திரிகா, “இலங்கையில் இன்று ஒற்றுமையின் சூழலினை உருவாக்கிக் கொடுத்ததும் மூவின மக்களின் ஒற்றுமையினை வென்றெடுத்து கொடுத்ததும் இந்த நாட்டிற்கான உயர்ந்த தியாகம் செய்த ராணுவ வீரர்களே ஆவர்.
பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் படும் துயரம் சொல்லிலடங்காதது. நாட்டிற்காக தமது உயிரினை மாய்த்த ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் வேதனையடைவதையும் அதேபோல் நாட்டிற்காக பிள்ளைகளை பெற்றெடுத்ததை நினைத்து பெருமையும் அடையவேண்டும்.
எனினும் கடந்த காலத்தில் இந்த போர் வெற்றியினை ஒரு சிலர் அல்லது ஒரு தனி நபர் மட்டுமே உரிமை கொண்டாடிக் கொண்டிந்தமையும், போர் வெற்றியின் மூலம் ஒரு குடும்பம் மட்டும் நன்மையடைந்ததையும் நாம் கண்டோம். அந்த நபர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக்கொள்ள பெரிய சதித்திட்டம் நடைபெறுகிறது.
ராணுவத்தின் வெற்றியினை சுயநலத்திற்காக பயன்படுத்தி அதில் வாழ்கின்றனர். நாம் நாட்டையும் மக்களையும் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். எனினும் இந்த பத்து ஆண்டுகளின் நாட்டின் அரசு வேலை முதல் அனைத்து விடயங்களிலும், அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல் பரவியிருக்கின்றது. எமது கையில் இன்று மீண்டும் நாடு ஒப்படைக்கப்பட்டாலும், மக்களுக்கான தூய்மையான நாடாக மாற்றியமைப்பதற்கு மிக நீண்ட காலம் அவசியம். அதற்கு மக்களும் பொறுமையுடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடந்த ஆட்சியால் இலங்கை பத்தாயிரம் கோடி ரூபாய் அமெரிக்க டாலர்கள் கடனில் உள்ளது. இவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். புதிய அரசாங்கம் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் நாட்டின் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் நூறு நாட்களில் நாட்டை மீட்டெடுக்க முடியுமா என எனக்குத் தெரியாது.
இந்நிலையில் பொதுத் தேர்தல் ஒன்றிற்கு நாடு முகம் கொடுக்கவுள்ளது. இதுவரையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியில் திருடர்களும், ஊழல் மோசடிக்காரர்களுமே
இவ்வாறு சந்திரிகா பேசியுள்ளார்.