பெண்களுக்கு தாலி தேவையா? தேவையில்லையா? கருணாநிதி கருத்து

thaaliகி.வீரமணி தலைமையிலான திராவிரர் இயக்கத்தினர் சமீபத்தில் தாலி அறுக்கும் நூதன போராட்டம் ஒன்றை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த போராட்டம் குறித்தும் தாலி குறித்தும் மு.கருணாநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முரசொலி நாளிதழில் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் எழுதும் கருணாநிதி இதுகுறித்து கூறும்போது, “பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கவும் மாட்டேன்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றி வைத்து விடுவதும் அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது என்று கூறியுள்ளார்.

தி.க. சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேப்பேரி, அயனாவரம், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையங்களிலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply