புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை ஊர்வலம் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

640x392_14932_131724

லெந்துகாலம்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் லெந்துகாலம் நிர்ணயம் செய்து உபவாசம் மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கும் கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார்கள். அதாவது, ஏசு கிறிஸ்து மக்களுக்கு போதனை செய்வதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார் என்றும், பின்னர் பெத்தலேகம் அரசால் பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதும் பைபிளில் சொல்லப்பட்டதாகும்.

ஏசுவை, அந்நாட்டு அரசு சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்கு முன்னதாக சிலுவையை சுமந்தபடி வழிநெடுக நடக்க செய்தனர். பின்னர் கொல்கதா மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிலுவையோடு சேர்த்து ஆணியால் அறையப்பட்டார். அங்கு 3 மணிநேரம் சிலுவையோடு தொங்கியபோது 7 திருவசனங்களை பேசி உயிரைவிட்டதாக பைபிள் கூறுகிறது.

dtl_21_10_2013_9_21_52

புனிதவெள்ளி ஊர்வலம்

அதை நினைவுகூறும் வகையில் ஏசு கிறிஸ்து மறைந்த வெள்ளிக்கிழமையை, கிறிஸ்தவர்கள் துக்கநாளாகவும் புனித வெள்ளிக்கிழமையாகவும் கடைபிடித்து வருகிறார்கள். மறைந்த 3-ம் நாள் கழித்து ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள்(நாளை ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சேலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைபிடித்தனர்.அதையொட்டி, நேற்று ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் சிலுவையை ஏந்திக்கொண்டு செல்லும் சிலுவைப்பாதை என்னும் ஊர்வலம் நடத்தினார்கள். அதில் ஒரு சிலுவை மட்டும் பெரிய அளவில் இருந்தது. சேலம் அரிசிப்பாளையம் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து சிலுவைப்பாதை ஊர்வலமாக புறப்பட்டு குழந்தை ஏசு பேராலய வளாகத்தை அடைந்தது.

சிறப்பு பிரார்த்தனை

பின்னர் அங்கு குழந்தை ஏசு பேராலய பங்கு தந்தை கிரகோரிராஜன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும் திருப்பலியும் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோட்டை சி.எஸ்.ஐ. ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கிறிஸ்து நாதர் ஆலயம், சேலம் அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள சர்ச் மற்றும் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply