கின்னஸ் சாதனை செய்த இந்திய வீரர் ஆண்டிஸ் மலைத்தொடரில் மரணம்.

malliஉலகில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள சிகரங்களில் 172 நாட்களில் ஏறி கின்னஸ் சாதனை செய்த இந்திய வீரர் மல்லிமஸ்தான் பாபு. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு இந்த சாதனையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மலையேறும் வீரரான மல்லிமஸ்தான் பாபு, காரக்பூர் ஐ.ஐ.டியில் தொழிற்கல்வியை படித்துவிட்டு மலையேற்றத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அதில் ஈடுபட்டு பல சாதனைகளை செய்தார்.

இந்நிலையில் தென்அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா – சிலி நாடுகளுக்கிடையே உள்ள ஆன்டிஸ் மலைத் தொடரில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இவர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென காணாமல் போனார். மல்லிமஸ்தான் பாபுவைத் தேடும் முயற்சியில் அர்ஜெண்டினா மற்றும் சிலி ஆகிய இரு நாடுகளின் மீட்புப்படையினர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்திய அரசும் மல்லிமஸ்தானை மீட்கும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில் ஆன்டிஸ் மலைத் தொடரில் மல்லிமஸ்தான் பாபு சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறைந்த மல்லிமஸ்தான் பாபுவுக்கு இந்திய அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply