விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சூப்பர் ஸ்டாரின் மருமகன். பெரும் பரபரப்பு

vijay and dhanushஇளையதளபதி விஜய் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நண்பர்களாக இருந்து அவர்களுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சிம்பு மற்றும் தனுஷுடன் விஜய் நெருங்கிய நட்புடன் சமீபகாலமாக இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. சிம்புவுக்கு தல அஜீத் விருப்பமான நடிகராக இருந்தாலும் விஜய்யுடனும் நெருங்கிய நட்பு உண்டு.

இந்நிலையில் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய நடிகர் தனுஷ், “”விஜய் தனக்கு நல்ல ஒரு நெருங்கிய நண்பர் என்றும் அதிகமான அடக்கமான மனிதர் என்றும் அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் பழகக்கூடிய தன்மையை உடையவர் என்றும் கூறினார். மேலும் விஜய், தன்னை விட இளம் வயதினராக இருந்தாலும் ப்ரெண்ட்லியாக தோள் மேல் கை போடுவார் என்றும் அதே போல் தனது தோள் மீது கை போடவும் அனைவரையும் அவர்  அனுமதிப்பார் என்றும் தனுஷ் கூறினார்.

தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள விஜய்,  யாருடைய பாணியையும் பின்பற்றாமல் அவரே தனக்கென ஒரு பாணியுடன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வரும் ஒரு நடிகர் விஜய் என்ரும் அவர் எனது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் மருமகனே விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டதால் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Leave a Reply