பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானிக்கு அவமரியாதையா? பெரும் பரபரப்பு.

advaniபெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி திடீரென பேச மறுத்ததால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றிய நிலையில் கட்சியின் முத்த தலைவரான அத்வானிக்கு முதல் நாள் கூட்டத்தில் பேச அழைப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் அத்வானியை பேசுமாறு கட்சியின் தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது அழைப்பை எல்.கே.அத்வானி ஏற்க மறுத்ததோடு கூட்டத்தில் பேசவும் மறுத்துவிட்டார். முதல்நாள் கூட்டத்தில் பேச அனுமதிக்காமல் அவமதித்ததால்தான் இரண்டாவது நாள் கூட்டத்தில் அவர் பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜனதா கட்சி தொடங்கி 35 ஆண்டுகளில் தேசிய செயற்குழுவில் அத்வானி பேச்சு இடம் பெறாமல் இருப்பது இது 2வது முறையாகும்.

Leave a Reply