கடந்த 1980கள் மற்றும் 90களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கிய நடிகை ரேவதி, கடந்த 2002ஆம் ஆண்டு ‘மித்ரு மை ப்ரண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியையடுத்து அவர் மீண்டும் ‘பிர் மிலிங்கே’, ‘மும்பை கட்டிங்’ என இரண்டு பாலிவுட் திரைப்படங்களையும் கேரளா கபே, என்ற மலையாள படத்தையும் இயக்கி சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.
கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த மும்பை கட்டிங்’ என்ற படத்திற்கு பின்னர் ரேவதி, வேறு படங்கள் எதுவும் இயக்கவில்லை. இந்நிலையில் ரேவது தற்போது புதிய படம் ஒன்றை விரைவில் இயக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிறுகதை ஒன்றை தழுவி இந்தப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வரும் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.