திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி. கருணாநிதி நலம் விசாரித்தார்.

anbalaganதிமுக பொதுச் செயலாளரும் திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகனுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 93. இன்று காலை 8 மணி அளவில் திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

அன்பழகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்ததும் உடனடியாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் முன்னணி தலைவர்கள் நேரில் சென்று அன்பழகன் உறவினர்களிடம் நலம் விசாரித்தனர். மேலும் மருத்துவர்களிடம் அன்பழகனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
 

Leave a Reply