அஜீத் பாணியை பின்பற்றும் விவேக்.

vivekசமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த காமெடி நடிகர் விவேக், தற்போது கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் அவர் அஜீத்தின் பாணியை பின்பற்றி ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் விவேக் இன்று தனது டுவிட்டரில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புடன் உள்ள ஸ்டில்ஸ்களை வெளியிட்டுள்ளார்.

 ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்கவிருக்க்கும் இந்த படத்தில் கார்த்தி, நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்க்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் துவங்கவுள்ளது.

Leave a Reply