முதலிரவு முடிந்த பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கணவனை கத்தியால் குத்திய மனைவி. ரஷ்யாவில் பரபரப்பு

murderஸ்வெட்லானா இல்வினா அவர்களும் அனடாலியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இருவருக்கும் திருமணம் நடந்து முதலிரவு மகிழ்ச்சியுடன் முடிவடைந்த பின்னர் அனடாலி அன்றைய இரவில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தூக்கத்தில் தனது முதல் மனைவியின் பெயரை கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வெட்லானா இல்வினா, முதல் மனைவியை இன்னும் மறக்காமல் தன்னை அனடாலி திருமணம் செய்து கொண்டதாக ஆத்திரம் அடைந்தார்.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த ஸ்வெட்லானா இதுகுறித்த சிந்தனையில் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் பழங்கள் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவனை ஆத்திரம் தீர கத்தியால் குத்தி கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தான் செய்த கொலையை மறைக்க விரும்பாமல் போலீசாருக்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறி சரணடைந்தார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் மத்திய ரஷ்யாவின் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply