சூரியக்கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்கி, சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, சருமம் அதிகம் வறட்சியடையும். குறிப்பாக சிலருக்கு கோடையில் உதடு வெடிப்புகள் ஏற்படும்.
கோடையில் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் பராமரிப்புக்களில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
• வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் மற்றம் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சரும சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.
• நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றி இருக்கும்.
• வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை, வறட்சி போன்றவை நீங்கி, முகம் புத்துணர்ச்சியோடு காணப்படும். இதனை தினமும் கூட செய்து வரலாம்.