சபரிமலை :சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ கொண்டாட்டத்துக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வரும் 19-ம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். 15-ல் விஷூ கொண்டாட்டம் நடக்கிறது.பங்குனி உத்திர திருவிழா முடிந்து கடந்த மூன்றாம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கிறது. மேல்சாந்தி கிருஷ்ண தாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். இன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. நாளை காலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும். உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜைகளும் இந்த நாட்களில் நடைபெறும்.சித்திரை விஷூ 15-ம் தேதி ொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றாம் தேதி 14-ல் வருகிறது. கேரளாவில் ஒரு நாள் பின்ன தாக 15-ம் தேதி வருவதால் அன்று விஷூ கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டம் வழங்குவார். அன்று மதியம் அன்னதானம் நடக்கிறது.19-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டல
மகரவிளக்கு சீசனுக்கு அடுத்த படியாக சித்திரை விஷூ சீசனில்தான் அதிகமான பக்தர்கள் சபரிமலை வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கான வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். செங்கன்னூர், திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பத்தணந்திட்டை போன்ற இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.