ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 4வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று நடைபெற 5வது போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியிடம் ராயல் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.
டாஸ் வென்ற ராயல் கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். உத்தப்பா மற்றும் காம்பீர் ஆகியோர்களின் சிறப்பான தொடக்கம், மற்றும் ரூசலின் அதிரடி ஆகியவற்றால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெற 178 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி கெய்லேவின் அதிரடி ஆட்டத்தால் 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெய்லே 7 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் 28 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி 13 ரன்களும் எடுத்தனர். கெய்லே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.