பலியான 20 தமிழர்கள் வாரிசுகளின் கல்வி செலவை பாமக ஏற்கும். அன்புமணி ராமதாஸ்

anbumaniசமீபத்தில் திருப்பதி அருகேயுள்ள வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பலியான 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும், தமிழக அரசும் நிதியுதவி செய்து வருகிறது.

இந்நிலையில் பலியான 20 தமிழர்களின் வாரிசுகளின் கல்விச்செலவை பாமக ஏற்கும் என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், பாமக கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான  அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து போளூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ”ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 பேரின் வாரிசுகளின் கல்விச்செலவை பாமக ஏற்கும். வாரிசுகள் உயர் கல்வி வரை படிக்கும் செலவை ஏற்கிறோம். 20 பேரின் குடும்பங்களுக்கும் 25 லட்சம் பணம், வீடு, வேலைவாய்ப்பு தர தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply