அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

hilary clintonதற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 2016ஆம் ஆண்டுடன் முடியவிருப்பதால் புதிய அதிபர் யார் என்பது குறித்து தற்போது முதலே அமெரிக்காவில் பெரும் பரபரப்புடன் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒபாமா ஏற்கனவே இருமுறை அதிபர் பதவி வகித்துவிட்டதால் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளரை அறிவிப்பதில் ஜனநாயக கட்சி பெரும் மும்முரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இந்த கட்சியில் ஹிலாரியை தவிர வேறு யாரும் நட்சத்திர வேட்பாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவை அடுத்து அதிக செல்வாக்குடன் இருக்கும் ஹிலாரி கிளிண்டன் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளிவுறவு அமைச்சரும் ஆவார். ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதால்  அதற்கான பிரச்சாரத்தையும் அவர் உடனே தொடங்கிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன. மேலும்  ’எவரிடே அமெரிக்கன்’ (Everyday American) என்ற விளம்பர வரிகளுடன் பிரச்சாரத்தை அவர் ஆரம்பிக்க உள்ளார். அதன் முதல்படியாக தனது பெயரில் இணையதளத்தில் 2 நிமிடம் ஓடக்கூடிய விடியோவையும் அவர் நேற்று பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply