மதுரை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்.,14ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வைர கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை சூட்டப்படுகிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கும்; மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருக்கும். அம்மனுக்கு வைர கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை சூட்டி பூஜைகள் நடக்கும். கோவில் கொடி மரம் முன் காலை 10 மணிக்கு பஞ்சாங்கம் வாசிக்கப்படும். கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.