[carousel ids=”60448,60449″]
திருப்பதி: திருமலையில் முடி காணிக்கை செலுத்துவதை, தேவஸ்தானம் இலவசமாக்கி உள்ளது.திருமலையில், இதுவரை, தலைமுடி காணிக்கை செலுத்த, நபர் ஒருவருக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதை, தற்போது, தேவஸ்தானம் இலவசமாக்கி உள்ளது. திருமலையில், முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு, கல்யாண கட்டா என்று பெயர். திருமலையில் உள்ள, மெயின் கல்யாண கட்டா, மினி கல்யாண கட்டாவில் மட்டும், இந்த இலவச வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பக்தர்கள் அதிகம் பயன்படுத்தாத, டி.பி.சி., நாராயணகிரி, விஷ்ணுபாதம், பாஞ்சன்யம், கவுஸ்துபம், சன்னிதானம், சுதர்சனம் போன்ற இடங்களில் உள்ள கல்யாண கட்டாக்கள், மே 1ம் தேதி முதல் மூடப்படும். அனைத்து கல்யாண கட்டாக்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கோடை காலத்தில், பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, நாவிதர்கள் நியமிக்கபடுவர் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.