வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் நடித்த நடிகை உடல்நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தார் என்ற செய்தி கோலிவுட் திரையுலகினரை ஆழ்த்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான பிரியாணி படத்தில் நடித்த ஹானி சிவராஜ் அஞ்சனா என்பவர் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மலேசியாவை சேர்ந்த இவர் பல மலேசிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சமீபத்தில் திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக இன்று காலை மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அஞ்சனாவின் மறைவிற்கு வெங்கட்பிரபு, கார்த்தி உள்பட பிரியாணி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.